கோலி அதை செய்வாரு பாருங்க! உறுதியாக சொல்லும் கங்குலி!

Virat Kohli : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 பந்துகளில் 100 ரன்கள் அடிப்பார் என கங்குலி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கும் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த முறை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இந்திய அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது.
கேப்டனாக ரோஹித் சர்மா டி20 இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்துவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், விளையாடும் வீரர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருந்தாலும் தகவல்களாக ஒவ்வொரு வீரர்களின் பெயர் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட உலகக்கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓப்பனிங் இறங்குவார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் பலரும் இது உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்கள். அப்படி தான் தனக்கும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓப்பனிங் களமிறங்க ஆசை இருக்கிறது எனவும் விராட் கோலி பேட்டிங் பற்றியும் இந்திய கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கண்டிப்பாக ஓப்பனிங் இறங்கி ஆடவேண்டும். அப்போது தான் அணிக்கு நல்ல ஓப்பனிங் ரன்கள் கிடைக்கும். அதைப்போல விராட் கோலியின் பேட்டிங் இந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் நன்றாக இருக்கும். 40 பந்துகளில் அவர் சதம் அடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” எனவும் கங்குலி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025