மருத்துவமனையில் கங்குலி – 2வது முறையாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை.!
சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு நேற்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கங்குலிக்கு 2வது முறையாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை கூறியதாக தகவல் கூறப்படுகிறது.
மேலும், கங்குலியின் இருதயத்திற்கு ரத்தம் செல்லும் குழாய்களில் 2 ஸ்டெண்டுகள் பொறுத்தப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு சிகிச்சையளிக்க ஒன்பது பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த டாக்டர் தேவி ஷெட்டி, ஆர்.கே.பாண்டா, சாமுவேல் மேத்யூ, அஸ்வின் மேத்தா மற்றும் ஷாமின் கே ஷர்மா போன்ற மருத்துவ நிபுணர்களைக் கலந்தாலோசித்த பின்னர், கங்குலியின் இதயத்தின் நரம்புகளில் 2 ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த 2-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டு இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.