சௌரவ் கங்குலி : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தீவிர தேடுதலில் பிசிசிஐ இருந்து வரும் நிலையில் பல கிரிக்கெட் ஜாம்பான்களின் பெயர்கள் அடிபட்டு கொண்டே இருந்தது.
அதில் குறிப்பாக கவுதம் கம்பிர் பெயர் என்பது தீவீரமாக அடிபட்டு கொண்டே வருகிறது. மேலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக செயல்ப்பட்டு இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையும் கைப்பற்றி இருந்தார் கவுதம் கம்பிர்.
இதனாலே அவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் ட்ராவிடுக்கு அடுத்த படியாக நியமிக்க வேண்டும் என்று பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தியதாகவும்.
இறுதியில் அவரை தான் நியமிக்க போவதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனவும் இப்படி பல தகவல்கள் பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி கம்பிரை குறித்து ரெவ் ஸ்போர்ட்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார். அவர் பேசுகையில்,”கம்பிர் இந்த பதவியில் ஆர்வம் அதிகம் உள்ளவர், மேலும் மிகவும் நேர்மையானவர்.
ஒரு ஐபிஎல் அணிக்கு ஆலோசகராக இருப்பதற்கும், ஒரு சர்வதேச அணிக்குப் பயிற்சியளிப்பதற்கும் உண்மையில் நிறைய வித்தியாசம் உள்ளது. அதுவும் இந்தியா போன்ற உயர்தர அணிக்கு பயிற்சியளிப்பது மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். அதை கௌதம் நன்கு அறிந்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற நட்சத்திரங்களை எவ்வாறு கையாளுவது என்பது அவருக்கு நன்றாக தெரியும், மேலும், இந்திய அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப கம்பிர் தன்னை மாற்றிக் கொள்வார்”, என்று கங்குலி கூறி இருந்தார்.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…