கம்பிர் தான் அடுத்த தலைமை பயிற்சியாளர்? கிட்ட தட்ட உறுதியாகும் பிசிசிஐ முடிவு !!

Gautam Gambhir

கவுதம் கம்பிர்  : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கம்பிர் தான் செயலாற்றுவார் என உறுதியான ஒப்பந்தம் ஒன்று முடிவாகி உள்ளது என தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் வருகிற இந்த டி20 உலகக்கோப்பையுடன் அந்த பதவியை நிறைவு செய்ய உள்ளார். அதன் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ மிகப்பெரிய தேடுதலை நடத்தியது. அதற்கு பல விண்ணப்பங்களும் வந்ததாக பிசிசிஐ குறிப்பிட்டிருந்தது, மேலும் விண்ணப்பங்களை அனுப்பவதற்கு கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதவிக்காக ஜெயவர்தனே, ஃபிளெமிங் என பலரிடம் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. மேலும், இந்த ஐபிஎல் தொடர் நிறைவடைந்தவுடன் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் பெயரும் அடிபட்டது. கவுதம் கம்பிர் இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக சிறப்பாக செயல்பட்டு இந்த வருட ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு பக்கபலமாக இருந்துள்ளார்.

இதனால் கம்பிரிடம் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அதற்கு கம்பிரும் பல நிபந்தனைகள் விடுத்ததாகவும் பல தகவல்கள் வெளியானது. தற்போது, வெளியாகி உள்ள தகவல் என்னவென்றால் கவுதம் கம்பிருடன் இறுதியான ஒப்பந்தம் உறுதியானது எனவும் அவர்தான் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் இதை பிசிசிஐ உலகக்கோப்பை முடிவடைந்த பிறகு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவார்கள் எனவும் வெளியாகி உள்ளது.

இந்த தகவலானது பிசிசிஐயின் உயர்மட்ட அதிகாரிகளில் நெருங்கிய தொடர்பு கொண்ட உயர்மட்ட ஐபிஎல் உரிமையாளர்களுள் ஒருவர் மூலம் கிரீக்பஸ் பத்திரிகைக்கு கிடைத்துள்ளது. எனவே பிசிசிஐயின் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் வரை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்