ரோஹித்திடம் பேசியதை நினைத்து மனம் நெகிழ்ந்த கம்பிர் ! என்ன விஷயம்னு தெரியுமா ?
Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார்.
இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா பல சாதனைகளை படைத்தது தவிர்க்க முடியாத இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். உலகக்கோப்பையில் 5 முறை சதம் அடித்த முதல் வீரர் ரோஹித் சர்மா தான். மேலும், 50 ஓவர் உலகக்கோப்பையில் மட்டும் இவர் 7 முறை சதங்கள் விளாசி உள்ளார்.
அதை தொடர்ந்து டி20 போட்டிகளில் 5 முறை சதங்கள் விளாசி உள்ளார். அதிலும் குறிப்பாக ஒரு பேட்ஸ்மானாக 3 முறை இரட்டை சதங்கள் அடித்த முதல் வீரரும் இவர் தான். இப்படி ரோஹித் ஷர்மாவின் சாதனைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இன்று இவர் தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட்பிரபலங்கள் , ரசிகர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி நினைவு கூர்ந்தார். இது குறித்து பேசிய கவுதம் கம்பீர் ” ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டுக்கு கிரிக்கெட் விளையாட வந்தபோது, இலங்கையில் 5 போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காத ஒரு அவருக்கு அமைந்தது எனக்கு இன்னும் வரை நினைவில் இருக்கிறது.
அவர் சரியாக விளையாடாத காரணத்தால் அந்த சமயம் அவர் மீது நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. அந்த சமயம் நான் ரோஹித்திடம் ஒரே ஒரு விஷயத்தைச் சொன்னேன். அது என்ன விஷயம் என்றால் உங்களுக்கு நிறையவே திறமை இருக்கிறது. உங்களுடைய திறமையை நீங்கள் கண்டிப்பாக வெளிக்காட்டுவீர்கள். உங்களை பார்க்கும் போது கண்டிப்பாக நீங்கள் உலககிரிக்கெட்டில் உங்களுடைய ஆதிக்கத்தை செலுத்துவீர்கள் என்று நான் நினைக்கிறேன். இதனை நான் 2008-ஆம் ஆண்டோ அல்லது 2009-ஆம் ஆண்டிலோ அவரிடம் சொன்னேன்.
நான் எதற்காக அவரிடம் அப்படி சொன்னேன் என்றால் அவருக்கு அந்த அளவுக்கு திறமை இருந்தது. அந்த திறமையை எப்படி வெளிகொண்டுவருவது என்பது ஆரம்ப காலத்தில் கொஞ்சம் சிரமமாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்கு மிகவும் எளிதான தொடக்கம் இல்லை, அவருக்கு கடினமாக இருந்தது. அந்த கடினங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்து இப்போது பெரிய அளவுக்கு வளர்ந்துவிட்டார்.
இப்போது பல இளம் வீரர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் அளவிற்கு ரோஹித் சர்மா வளர்ந்து இருக்கிறார். ஒரு வேலை அவர் விளையாட வந்த ஆரம்ப காலத்திலே எளிதாக கிரிக்கெட்டை விளையாடி இருந்தால் இன்று சர்வதேச கிரிக்கெட் மிகவும் எளிதானது என்று நினைத்து இருப்பார். அவர் தொடக்கத்தில் தோல்வியான ஆட்டங்களை கண்டு தான் இப்போது பெரிய வீரராக மாறி இருக்கிறார்” எனவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.