லக்னோ அணியில் கம்பீருக்கு முக்கிய பொறுப்பு.. ஒப்பந்தத்தில் கையெழுத்து..!

லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லில் வரும் சீசனில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பத்து அணிகள் விளையாட உள்ளது. புதியதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய அணியான லக்னோ அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய எம்.பி.யுமான கவுதம் கம்பீர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் லக்னோ அணி ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி ஃப்ளவரை பயிற்சியாளராக நியமித்தது. இத்தகைய சூழ்நிலையில், இப்போது லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 7 ஆயிரம் கோடிக்கு கோயங்கா குழுமத்தால் வாங்கப்பட்ட அணியாக லக்னோ அணி உள்ளது.
கவுதம் கம்பீர் முன்பு ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில் கொல்கத்தா இரண்டு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. லக்னோ அணியின் ஆலோசகரான பிறகு, கவுதம் கம்பீர் சார்பில், இந்த பொறுப்பை எனக்கு வழங்கிய கோயங்கா மற்றும் ஆர்பிஎஸ்ஜி குழுமத்திற்கு நன்றி என்று தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
கம்பீர் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லிக்காக மொத்தம் 154 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 4218 ரன்கள் அடித்துள்ளார்.
It’s a privilege to be in the contest again. Thanks Dr.Goenka for incl me in #LucknowIPLTeam as its mentor.The fire to win still burns bright inside me, the desire to leave a winner’s legacy still kicks me. I won’t be contesting for a dressing room but for the spirit & soul of UP
— Gautam Gambhir (@GautamGambhir) December 18, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024