யார் வலிமை’னு பார்ப்போமா… இணையத்தில் வைரலாகும் கெயில் சஹால் புகைப்படம்..!

கிறிஸ் கெயிலுக்கு இணையாக யுஸ்வேந்திர சஹால் தன்னுடைய ஒல்லியான உடலை சட்டையை கழட்டி காட்டி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். கடைசிவரை கே.எல் ராகுல் 91*, ஹர்பிரீத் 25* ரன்களுடன் களத்தில் நின்றனர்.
அதனை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து, இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் கிறிஸ் கெய்ல் தனது ஜெர்சியை கழட்டிவிட்டு கட்டுக்கோப்பான உடலை காட்டி போஸ்கொடுத்தார், அதனை பார்த்த யுஸ்வேந்திர சாஹல் கெயிலுக்கு இணையாக தனது ஜெர்சியை கழட்டிவிட்டு அவருடன் இணைந்து போஸ்கொடுத்தார், அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
#ipl2021 #PBKSvRCB #chrisgayle@henrygayle @yuzi_chahal @RCBTweets pic.twitter.com/GBqqIfml3t
— Venkatesh R Das (@venkateshRdas) April 30, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025