வெளியானது ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை ..!! தோனியின் கனவு நிறைவேறுமா ..?

Published by
அகில் R

IPL 2024 : கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்க பட்ட ஐபிஎல் தொடரின் முதல் பாதி அட்டவணை வெளியாகி போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது, ஐபிஎல் தொடரின் 2-வது பாக அட்டவணையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் X தளத்தில் வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் அட்டவணை வெளியாகும் போதே பலவித சர்ச்சைகளுடன் தான் வெளியானது. இந்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் வெளியுடுவோம் என பிசிசிஐ தரப்பில் முதலில் கூறி இருந்தனர்.

பிசிசிஐ சொன்னது போல ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் முதலில் வெளியிட்டது. அந்த அட்டவணையில் ஐபிஎல் போட்டிகள் மார்ச்-22 முதல், ஏப்ரல்-7 ம் தேதி வரை நடைபெறும் எனவும், இடைப்பட்ட நாட்களில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும் என அறிவித்திருந்தது. மீதம் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ, நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியான பிறகு அறிவிக்கும் என தெரிவித்திருந்தது.

தற்போது, ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் X தளத்தில் ஸ்டார்  ஸ்போர்ட்ஸ் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட்டுள்ளது. மேலும், நடைபெற போகும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது போல அனைத்து போட்டிகளும் இந்தியாவில் தான் நடைபெறுகிறது. tதற்போது வெளியாகி உள்ள இரண்டாம் கட்ட அட்டவணையில் ஏப்ரல்-8 ம் தேதி தொடங்கப்பட்டு, மே-26ம் தேதி நிறைவடைகிறது. ஏப்ரல்-8 தேதி போட்டியாக சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணி போட்டியில் விளையாட உள்ளனர்.

குவாலிபயர்-1 மற்றும் எலிமினேட்டர் போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், குவாலிபயர் -2 மற்றும் இறுதி போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளது. தோனியின் மிகப்பெரிய ஆசை தனது கிரிக்கெட் கேரியரின் கடைசி போட்டியை (ஃபேர்வெல்) சென்னையில் விளையாட வேண்டும் என்பது தான்.

தோனிக்கு இது வரை ஒரு நல்ல ஃபேர்வெல் போட்டி அமையாத காரணத்தால், சிஎஸ்கே ரசிகர்கள் இந்த இறுதிபோட்டிக்கு சென்னை அணி வந்து கோப்பையை வென்று அந்த வெற்றியை ‘தல’ தோனிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதை சென்னை அணியின் புதிய கேப்டனான ருதுராஜ்ஜூம், சென்னை அணி வீரர்களும் செய்வார்களா என்று பொறுத்து இருந்து பாப்போம்.

 

 

IPL SCHEDULE
IPL SCHEDULE
IPL SCHEDULE

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

10 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

11 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

12 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

12 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

12 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

13 hours ago