இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றதால், இலங்கை தொடரில் விராட் கோலி, இல்லாததால் அணியை அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை கேப்டனாக புவனேஷ் குமாரும் செய்யப்படவுள்ளனர்.
இந்த தொடரில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், இந்தியா இலங்கை அணிக்கு இடையே நடைபெறும் இந்த தொடரின் முழு விவரத்தை பார்க்கலாம்.
ஒரு நாள் போட்டி நடைபெறும் நேரம் , இடம் :
இந்தியா இலங்கை அணிக்கு இடையே நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டி ஜூலை 13- ஆம் தேதி கொழுப்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானதில் மதியம் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இரண்டாவது ஒரு நாள் போட்டி ஜூலை 16- ஆம் தேதி கொழுப்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானதில் மதியம் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்றாவது ஒரு நாள் போட்டி ஜூலை 18-ஆம் தேதி கொழுப்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானதில் மதியம் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
டி 20 போட்டி நடைபெறும் நேரம் , இடம் :
இந்தியா இலங்கை அணிக்கு இடையே நடைபெறும் முதல் டி20 போட்டி ஜூலை 21 – ஆம் தேதி கொழுப்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானதில் இரவு 7.மணிக்கு நடைபெறவுள்ளது.
இரண்டாவது டி 20 போட்டி கொழுப்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானதில் இரவு 7.மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்றாவது டி 20 போட்டி கொழுப்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானதில் இரவு 7.மணிக்கு நடைபெறவுள்ளது.
ஒரு நாள் போட்டி : இந்தியா vs இலங்கை நேருக்கு நேர்:
இந்தியா மற்றும் இலங்கை இந்த இரண்டு அணிகளும் இதுவரை 165 ஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் மோதியதில், இந்திய அணி 91 முறையும், இலங்கை அணி 56 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
டி 20 போட்டி : இந்தியா vs இலங்கை நேருக்கு நேர்:
இந்தியா மற்றும் இலங்கை இந்த இரண்டு அணிகளும் இதுவரை 19 டி 20 போட்டிகள் மோதியதில் இந்திய அணி 13 முறையும், 5 முறை இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி சமமாக முடிந்துள்ளது.
இந்தியா vs இலங்கை வீரர்கள் விவரம்:
இந்தியா : ஷிகர் தவான் (கேப்டன்), பிருத்வி ஷா, தேவதூத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, நிதீஷ் ராணா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷன்ப்ப கௌதம், க்ருனால் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேதன் சகரியா
இலங்கை அணி வீரர்கள் இன்னும் அறிவிக்கப்படடவில்லை.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…