ரோஹித் முதல் பண்ட் வரை..அதிக தொகைக்கு எடுத்து சொதப்பும் 5 வீரர்கள்!

ஐபிஎல் 2025 தொடரில் டிரென்ட் போல்ட், ஜடேஜா உள்ளிட்ட 5 வீரர்கள் மோசமான பார்மில் உள்ளனர்.

ipl 2025 poor list

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங்கிலும், பல வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட 5 வீரர்கள் மட்டும் இன்னும் பழைய பார்முக்கு வராமல் திணறிக்கொண்டு விளையாடி வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், லக்னோ அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், மும்பை அணியில் ரோஹித் மற்றும் போல்ட், அதைப்போல சென்னை அணியில் ஜடேஜா, பஞ்சாப் அணியில் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் மோசமான பார்மில் இருக்கிறார்கள்.

1. ரிஷப் பண்ட்

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் படைத்திருந்தார். நடைபெற்ற மெகா ஏலத்தில் அவரை லக்னோ அணி ரூ.27 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இவ்வளவு பெரிய தொகைக்கு அவரை எடுத்த காரணத்தால் அவர் பேட்டிங் மீது பெரிய எதிர்பார்ப்புகளும் இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ஏனென்றால், உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக 0 (6 பந்துகள்), சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக 15 (15 பந்துகள்), பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 2 (5 பந்துகள்), மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2 (6 பந்துகள்) குஜராத் அணிக்கு எதிராக 18 பந்துகளில் 21 என எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். மொத்தமாக இந்த சீசனில் 5 போட்டிகள் விளையாடியுள்ள அவர் 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே, அவருடைய கம்பேக்காக அணியும் ரசிகர்களும் காத்துள்ளனர்.

2.ரோஹித் சர்மா 

அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன ரோஹித் சர்மா இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாகவே 56 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி அவரை இந்த சீசனில் 16.30 கோடிக்கு தக்க வைத்த நிலையில், இன்னும் ஒரு அரைசதம் கூட அவர் இந்த சீசனில் அடிக்கமுடியாமல் திணறி வருகிறார்.

3.டிரென்ட் போல்ட்

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை டிரென்ட் போல்ட்டை மெகா ஏலத்தில் 12.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்த நிலையில், அவர் இன்னும் சிறப்பாக விளையாடவில்லை என்று தான் சொல்லவேண்டும். இந்த சீசனில் 6 போட்டிகள் விளையாடிய அவர் மொத்தமாக 5 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். விக்கெட் 5 எடுத்தாலும் அவருடைய எக்கானமி 9.50-இல் இருக்கிறது. கடந்த ஆண்டு அவருடைய எக்கானமி 8.31 இருந்த நிலையில், 16 போட்டிகள் விளையாடி 16 விக்கெட்களை எடுத்து அசத்தி இருந்தார். எனவே, இந்த சீசனில் இன்னும் சில போட்டிகள் இருக்கும் நிலையில், அவர் பழையபடி பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. ரவீந்திர ஜடேஜா

சென்னை அணி இந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜாவை 18 கோடி கொடுத்து தக்க வைத்தது. ஆனால், பந்துவீச்சில் பேட்டிங்கிலும் அவரால் பெரிய அளவில் இதுவரை இந்த சீசனில் தாக்கத்தை ஏற்படுத்தமுடியவில்லை என்று சொல்லலாம். ஏனென்றால், பேட்டிங்கை பொறுத்தவரையில் 6 போட்டிகளில் மொத்தமாக 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.  அதைப்போல, பந்துவீச்சை பொறுத்தவரையில் 2 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். எனவே, இந்த சீசனில் அவருடைய பார்மும் கவலைக்கிடமாக தான் உள்ளது.

5. யுஸ்வேந்திர சாஹல்

சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி இந்த சீசனில் பஞ்சாப் அணி 18 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால், கடந்த சீசன்களை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துள்ளது. ஏனென்றால், 5 போட்டிகள் இதுவரை விளையாடி இருக்கும் அவர் 2 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளது மட்டுமின்றி எக்கானமி  11.13 வைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டு சீசனில் 18 விக்கெட்களை வீழ்த்தியது மட்டுமின்றி 9.41 எக்கானமி வைத்திருந்தார். இந்த சீசனில் சிறப்பாக விளையாடவில்லை என்பதால் அவருடைய கம்பேக்கும் அணிக்கு தேவையான ஒரு விஷயமாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்