இனிமேல் இதுதான் சம்பளம் ..! இஷான் – ஷ்ரேயஷால் இளம் வீரர்கள் உற்சாகம் ..!
இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் பேட்சமானான இஷான் கிஷன் தற்போது தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக தன்னை தயார்படுத்தி கொண்டு இருக்கிறார். அதே வேலையில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்கான பிசிசிஐ-யின் அழைப்பை அவர் மறுத்துள்ளார். பின் ரஞ்சி தொடரின் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்துடனும் எந்த ஒரு தொடர்பிலும் இல்லாமல் இருக்கிறார்.
முதலில் இஷான் கிஷன் புறக்கணித்தது போல, தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மானான ஷ்ரேயஸ் ஐயரும் பிசிசியின் அழைப்பை புறக்கணித்துள்ளார். ரஞ்சி கோப்பையின் மும்பை அணி அவரை அழைத்த போது, அவர் தனக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், அதை NCA மருத்துவத்தின் தலைமைத் தலைவரான நிதின் படேல் மறுத்து, ஷ்ரேயஸ் ஐயருக்கு எந்த ஒரு புதிய காயமும் இல்லை எனவும் அவர் விளையாட முழு தகுதியுடையவர் எனவும் அறிவித்திருந்தார்.
Read More :- விடைபெறுகிறேன்.. நன்றி.! கண்கலங்கிய நியூசிலாந்து வீரர்.!
பிசிசிஐ தலைவரான ஜெய்ஷா, அனைத்து கிரிக்கெட் சங்கத்திற்கும் அதற்கு ஒப்பந்தம் செய்திருக்கும் வீரர்களுக்கும், உடற்தகுதி இருக்கும் பொழுதே உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்து கடிதம் எழுதி இருந்தார். ஆனால், அதன் பிறகும் இதை இருவரும் கண்டுகொள்ளாமல் இருந்தது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மேலும் கவலையாக இருந்தது.
தற்போது, பிசிசிஐ டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக திருத்தப்பட்ட ஊதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின் படி தெரிய வந்துள்ளது. அதன் படி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு ரூ.15 லட்சமும், சர்வதேச ஒரு நாள் போட்டி ஒன்றுக்கு (ODI) ரூ.6 லட்சமும், சர்வதேச ஒரு டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சமும் தற்போது பிசிசிஐ ஊதியமாக அளித்து வருகிறது.
Read More :- #WPL 2024 : 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி ..!
ஆனால், இதில் மாற்றம் என்னவென்றால் ஒரு ஆண்டில் நடைபெறும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் முழு உடல் தகுதியோடு விளையாடும் வீரர்களுக்கு கூடுதல் சலுகையாக வெகுமதி அளிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இப்படி செய்வதனால் வளர்ந்து வரும் இளம் இந்திய வீரர்களுக்கு ஊக்கமாகவும் மேலும், ஐபிஎல், டி20I போட்டிகளை போல டெஸ்ட் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் செலுத்த வேண்டும் என்ற உத்வேகமும் ஏற்படும் என அறிவித்துள்ளனர். இதனால் இந்திய அணியின் இளம் வீரர்கள் உற்சகத்தில் உள்ளனர்.