ஐபிஎல் போட்டிகளில் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த வாரம் 16-ஆம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடினார். இதன் மூலம் அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.
முதல் விக்கெட்
அந்த போட்டியை தொடர்ந்து நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இரண்டு ஓவர்களுக்கும் மேலாக காத்திருந்த பிறகு, அர்ஜுன் டெண்டுல்கர் இறுதி ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தி ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார்.
மகன் முதல் விக்கெட் எடுத்துள்ள நிலையில், டிவிட்டரில் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் ”
மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஒரு சிறப்பான ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேமரூன் கிரீன் மட்டை மற்றும் பந்து இரண்டிலும் ஈர்க்கப்பட்டார். இஷான் & திலக்கின் பேட்டிங் சிறப்பாக உள்ளது.ஐபிஎல் போட்டி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகி வருகிறது. இறுதியாக ஒரு டெண்டுல்கருக்கு ஐபிஎல் விக்கெட் வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் நெகிழ்ச்சி
போட்டி முடிந்த பிறகு பேசிய அர்ஜுன் “இது ஒரு சிறந்த தருணம். 2008 முதல் நான் ஆதரிக்கும் அணிக்காக விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. மும்பை மற்றும் இந்திய அணியின் கேப்டனிடம் இருந்து தொப்பியைப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என கூறியுள்ளார். மேலும் ரோஹித் சர்மா அவருக்கு தொப்பி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…