2008 முதல் 2020 வரை பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன்.!
இந்திய அணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ” 2008 முதல் 2020 வரை. பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன். மேலும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
இதுவே என்னுடைய 1000-வது பதிவு என்று எழுதியுள்ளார். இள வயது கோலியும் தற்போது உள்ள கோலியும் ஒன்றாக இருப்பது போன்ற ஒரு படத்தைப் சேர்த்து அதில் இதை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.