சுதந்திரம் தான் முக்கிய காரணம் ..! போட்டிக்கு பின் கம்மின்ஸ் கொடுத்த ஸ்டேட்மென்ட்!!

Pat Cummins [file image]

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் அணி, பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17- வது சீசனின் 30- வது ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் பெங்களூரு அணியின் பந்து வீச்சை சிக்ஸர் மழைகளை பறக்க விட்டார்.

அவர் ஆடிய அந்த ஆக்ரோஷ ஆட்டத்தால் வெறும் 39 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்து களமிறங்கிய கிளாசன்னும் பெங்களூரு அணியை 31 பந்துக்கு 67 ரன்ஸ் எடுத்து பொலந்து கட்டினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேனும் விளாச இறுதியில், ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழந்து 20 ஓவருக்கு 287 ரன்கள் எடுத்தது.

இதனால் 288 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்கத்தில் அதிரடி காட்டிய கோலி 42 ரன்களுககும், சிறப்பாக விளையாடிய டுப்ளஸி 62 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து இறுதி வரை தினேஷ் கார்த்திக் மட்டும் தனியாக போராடி 83 ரன்கள் எடுத்து வெற்றியின் முனை வரை கொண்டு சென்றார். இதனால், பெங்களூரு அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் ஆன பேட் கம்மின்ஸ் வெற்றியின் காரணங்களை சுட்டி காட்டி பேசி இருந்தார். அவர் பேசுகையில். “நான் இது போன்ற போட்டிகளில் கேப்டன் ஆக இருக்க மிகவும் விரும்புகிறேன். மும்பைக்கு எதிராக போட்டியில் கூட எங்களுக்கு இதே போன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டது. இனி அதற்கு பிறகு நடக்காது என்று நினைத்தேன். ஆனால் மீண்டும் நாங்களே இங்கு இருக்கிறோம். ஒரு பந்து வீச்சாளராக நாங்கள் முடிந்ததை செய்தோம்.

நீங்கள் சரளமாக ஏழு அல்லது எட்டு ரன்களை விட்டுக்கொடுக்கும் ஒரு சாதாரண ஓவர் கூட இது போன்ற போட்டியை அது பாதிக்கலாம். மேலும், இப்போது எல்லாம் விளையாட போகும் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்று கணிக்கும் முயற்சியை நான் நிறுத்திவிட்டேன். எனது அணியினர், பிட்ச் எப்படி இருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிடுகிறார்கள். இதுவரை இந்த தொடரில் நான்கு வெற்றிகளைப் பெற்றுள்ளோம் உண்மையில் எனது அணியின் வீரர்கள் போட்டியில் செயல்படுத்தும் சுதந்திரம் தான் இதற்கான முக்கிய காரணம்.

அவர்கள் தொடர்ந்து சுதந்திரத்துடன் விளையாடுவதை பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், ஒரு அணியின் அனைத்து வீரர்களும் இவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”, என்று போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் ஆன பேட் கம்மின்ஸ் பேசி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்