சர்ஃப்ராஸ் கான் தந்தை பெயரில் மோசடி ..? வீடியோ வெளியிட்டு விளக்கினார் நௌஷாத் கான் ..!

Sarfraz Father [file image]

Naushad Khan :  இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவின் இளம் வீரரான சர்ஃப்ராஸ் கான் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் இவரது அபார விளையாட்டால் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும், தொழிலதிபர்களும் வாழ்த்து தெரிவித்துனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர். மேலும், சர்ஃப்ராஸ் கானின் தந்தையான நௌஷாத் கான், சர்ஃப்ராஸ் கானின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததற்காக அவருக்கும் பாராட்டு மழை குவிந்த வண்ணம் இருந்தது.

Read More :- Badminton : ஓய்வை அறிவித்தார் இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ..!

இந்த நிலையில், சில மர்ம நபர்கள் ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாக்ராமிலும் சர்ஃப்ராஸ் கானின் தந்தை பெயரில் பொய்யான சமூக தளங்களை உருவாக்கி, வளர்ந்து வரும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து பண மோசடி செய்து வருகின்றனர். இதற்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களை கண்டித்தும் சர்ஃப்ராஸ் கான் தந்தை நௌஷாத் கான், அவரே பேசுகின்ற வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், “காலை வணக்கம் நண்பர்களே. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் என் பெயரை (நௌஷாத் கான்) பலர் பயன்படுத்தி போலி ஐடிகளை உருவாக்கி வருவதால் அதற்கு விளக்கம் அளிக்க நானே உங்கள் முன் வந்துருகிறேன். அந்த மர்ம குமபல் கிரிக்கெட் திறமை உள்ள சிறுவர்களிடம் பணம் பறிக்கிறார்கள். அந்த மர்ம நபர்கள் அவர்களிடம், நாங்கள் உங்களை ஐபிஎல்-ல் சேர்த்து விடுகிறோம் எனவும், அகாடமியில் தேர்வு செய்வோம் எனவும் ஆசை வார்த்தை பேசி பணம் பறிக்கிறார்கள்.

Read More :- INDvsENG : 14-வது வீரராக 100கிளப்பில் இணைய போகும் அஸ்வின் ..!

நீங்கள் யாரும் இதை நம்ப வேண்டாம், இதில் ஈடுபட வேண்டாம், நீங்கள் உங்கள் கடின உழைப்பை மட்டும் நம்புங்கள் அது உங்களை ஒரு நாள் உயர்த்தும். மேலும், நான் தற்போது எந்த ஐபிஎல் அணியுடனும் தொடர்பில் இல்லை. நான் எப்போதும் பயிற்சியாளராகப் போவதில்லை. எனவே, அந்த மர்ம கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள்.  அவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி அவர்களுடன் ஈடுபடாமல் இருங்கள்” என்று, சர்ஃபராஸ் கானின் தந்தை நௌஷாத் கான் வெளியிட்ட அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested