நான்காம் நாள் ஆட நேரமுடிவில் ஆஸ்திரேலிய அணி 104 ரன்கள் எடுத்ததுள்ளது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடர்களுக்கு பிறகு தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது.
அடிலெய்ட்டின் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ்வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடி வந்த ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது.மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 61 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது.களத்தில் புஜாரா 40,ரகானே 1 ரன்களுடன் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க் ,ஹேசல்வுட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்பின் நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய தொடங்கியது.இந்திய அணி 106.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 71,ரகானே 70 ரன்கள் அடித்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் லியான் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதனால் இந்திய அணி 323 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதன்பின் 323 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி துரத்த ஆரம்பித்தது. ஆனால் நான்காம் நாள் ஆட நேரமுடிவில்
ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்ஷ் மட்டும் 31 ரன்கள் அடித்துள்ளார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் சமி ,அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…