நேற்றைய உலகக்கோப்பை போட்டியின் போது நான்கு பேர் கைது!
நேற்று நடந்த முதல்அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியும் முதலில் களமிறங்கி 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் அடித்தனர்.அப்போது மழை குறுக்கிட்டதால் மீதம் உள்ள போட்டி இன்று தொடரும் என நடுவர்கள் கூறினார்.
இப்போட்டியில் ரசிகர்கள் நான்கு பேர் காலிஸ்தான் இயக்கம் சார்பாக தனிநாடு கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்தினர். மைத்தனத்தில் அரசியல் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அந்த நான்கு பேரையும் காவல் துறை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் ,சீக்கிய மதத்தை சார்ந்த நான்கு பேர் அரசியல் வாசகம் கொண்ட டி சர்ட்டை அணிந்து தனிநாடு கோரிக்கை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மைதானத்தில் இருந்த பாதுகாப்பு காவலர்கள் கொடுத்த தகவல் படி அவர்களை கைது செய்தோம் என கூறினார்.
மேலும் இதற்கு முன் இந்திய அணி -இலங்கை அணியுடன் மோதிய போட்டியின் போது “காஷ்மீருக்கு நீதி வேண்டும் “என்ற வாசகத்தை ஏந்திய படி மைதானத்தின் மேல் விமானம் ஓன்று பரந்து சர்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.