இலங்கையின் முன்னாள் கேப்டன் சங்கக்கராவின் எம்சிசி தலைவர் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு.
கிரிக்கெட் விதிகளை சிறப்பாக உருவாக்குவதில், கிரிக்கெட் கவுன்சிலுக்கு முன்னோடியாக திகழ்வது, லண்டனில் செயல்படும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் தான். இந்த கிளப்பின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா பதவி வகித்து வருகிறார். பொதுவாக இதன் பதவி காலம் ஒரு ஆண்டு ஆகும்.
இந்நிலையில், உலகம் முழுவதும் தீவிர தாக்குதலை நடத்தி வரும் கொரோனா வைரஸால், கிரிக்கெட் சம்பந்தமான அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, சங்ககராவின் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 24-ந்தேதி நடக்கவிருக்கும் இந்த கிளப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள். இதனை தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் வரை இந்த பணியில் சங்கக்கரா தலைவராக பதவி வகிப்பர். மேலும், இரண்டாம் உலகப்போருக்கு பின், எம்.சி.சி. தலைவராக ஒருவர் ஓராண்டுக்கு மேல் நீடிப்பது, இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…