இந்தியாவின் மிகப் பெரிய சவாலே இதுதான்… முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கவலை!
2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கலவைவையை கண்டுபிடிப்பதில் பெரிய சவால் இருக்கும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் கவலை தெரிவித்தார். ஐசிசி ஒருநாளை உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று உச்சகட்ட ஃபார்மில் இருந்த நிலையில், இறுதிப்போட்டில் தோல்வியை சந்தித்து கோப்பையை தவறவிட்டது.
இம்முறை உலகக்கோப்பை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்றது.
இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் 2024, டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதனிடையே, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
ஆனால், இந்த தொடரில் டி20 தொடருக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடாததும் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், 2024 டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோஹித் சர்மாவா அல்லது பாண்டியாவா என்றும் விராட் கோலி போன்ற சீனியர்கள் விளையாடுவார்களா அல்லது முழுவதுமாக இளம் அணி விளையாடுமா? என குழப்பங்கள் காணப்படுகிறது.
இந்த தலைமுறையில் மிகவும் திறமையான பேட்ஸ்மேன் இவர்தான்… பிரையன் லாரா பாராட்டு!
இதனால், இந்திய அணியின் கலவை எப்படி இருக்கும்? மற்றும் அணியின் நிலவரம் எப்படி இருக்கும்? என பலவேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மூத்த நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இருப்பார்களா? என கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், கேப்டன் யார்? எந்த மாதிரியான வீரர்கள் விளையாடப் போகிறார்கள் என்ற தெளிவான விவரங்கள் தெரியும் வரை 2024 டி20 உலகக் கோப்பையையும் இந்தியா வெல்வது கடினம் என்று முன்னாள் வீரர் பார்திவ் படேல் கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக க்ரிக்பஸ் இணையத்தில் பார்திவ் படேல் பேசியதாவது, டி20 உலகக் கோப்பைக்கான சரியான கலவை கொண்ட இந்திய அணியை பெறுவது சவாலாக இருக்கும். இது சமீபத்திய ஆண்டுகளில் அவர்கள் விளையாடிய போட்டிகளில் பார்க்க முடிந்தது.
இதனால் இந்தியாவின் மிகப் பெரிய சவால் என்பது சரியான கலவையை கொண்ட அணியை கண்டுபிடிப்பதுதான். இதில் குறிப்பாக குறிப்பாக டி20 வடிவத்தில் தான். 2024 ஐபிஎல் தொடங்குவதற்கு முன் தென்னாப்பிரிக்கா தொடரும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. விராட் அல்லது ரோஹித் அல்லது பும்ரா விளையாடினால் இந்திய அணியின் கலவை எப்படி இருக்கும்.
எனவே, இந்தியா இதனை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்று நான் நினைக்கிறேன். இல்லையெனில், ஐபிஎல்லில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுடன் செல்ல வேண்டும். ஆனால் ஐபிஎல் போட்டியின் பாதியிலேயே, டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவிக்க வேண்டும். இது ஒரு சவாலாக உள்ளது. அணியை அறிவிப்பதற்கு முன், உலகக் கோப்பைக்கான வரிசையில் யார் இருக்கிறார்கள் என்பதையும், ஆப்கானிஸ்தான் தொடருரில் யார் விளையாட வேண்டும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
பும்ரா ஒரு வருடத்தில் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், இருப்பினும் அவர் காயத்தில் இருந்து மீண்டு பெரியளவில் விளையாடவில்லை. 2022 டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறிய பிறகு ரோஹித் மற்றும் கோலி இருவரும் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டி20 போட்டி விளையாடாத ரவீந்திர ஜடேஜா, தென்னாப்பிரிக்கா தொடரில் அணியின் துணை கேப்டனாக உள்ளார்.
இந்த இளம் அணியுடன் செல்வதன் மூலம் அவர்கள் கூடுதல் விருப்பங்களைப் பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் திறமைசாலிகளுக்கு குறைவில்லை. ஆனால், சரியான வீரர்களை தேர்வு செய்வதே பிரச்சனையாக இருக்கிறது. ஏராளமான பிரச்சனை இன்னும் உள்ளது. எனவே, டி20 உலகக் கோப்பையில் சரியான கலவையை தீர்மானிப்பதே இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கு என்று கூறினார்.