Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியான பார்மில் விளையாடி வருகிறது. இதுவரை 7 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் ஹைதராபாத் அணி இந்த சீசனில் பெரிய அளவில் சாதனைகளை படைத்தது கொண்டு வருகிறது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கடைசியாக பெங்களூர் அணிக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் கூட முதலில் பேட்டிங் செய்த போது 287 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்தது இருந்தது. எனவே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பார்ம் பற்றி ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் சமீபத்திய பேட்டி ஒன்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பார்ம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கை இந்த சீசனில் பார்க்கும் போது ரொம்பவே பயமாக இருக்கிறது. நான் இந்த நேரத்தில் கடவுளுக்கு தான் நன்றி சொல்வேன்.
என்ன காரணத்துக்காக நன்றி சொல்வேன் எதற்காக என்றால் இந்த காலத்தில் என்னை கிரிக்கெட் விளையாடாமல் ஆக்கியதற்கு தான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 270, 280 ரன்கள் அசால்டாக அடிக்கிறார்கள். ஒரு போட்டியில் இப்படியான ரன்கள் அடித்தால் பரவாயில்லை ஆனால், அவர்கள் பல போட்டிகளில் இப்படி அடிக்கிறார்கள்.
5 ஓவரில் 100 ரன்கள் அடிக்கிறார்கள். இப்படியெல்லாம் ரன்கள் அடிப்பது சட்டவிரோதம். இது எப்படி நடக்கும்? பந்துகளை ஃபுல்-டாஸ் வீசினாலும் கூட இப்படி ரன்களை குவிக்க செய்வது ரொம்பவே கடினமான விஷயம்.ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் எல்லாம் அந்த அணியில் இருப்பதால் அணி நல்ல வலிமையாக மாறியுள்ளது. வரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் எனவும் நான் நம்புகிறேன் என்றும்” வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். மேலும், நாளை ஹைதராபாத் அணி பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…