முன்னாள் இந்திய தேர்வாளர் சேத்தன் ஷர்மா சில கிரிக்கெட் வீரர்களை பற்றி மரியாதை இல்லாமல் பேசிய வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பி ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் இந்திய வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டு விளையாடுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இவர் இந்திய தேர்வாளர் பதவியில் இருந்த சமயத்தில் தான் விராட் கோலி கேப்டன் பதவிகளில் இருந்து விலகினார். இதனால் இதற்கு சேத்தன் ஷர்மா ஒரு முக்கிய காரணம் என்றும் முன்னதாகவே பேசப்பட்டது. ஆனால், தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சேத்தன் ஷர்மா விராட் கோலி தனது மகன் மாதிரி என்று பேசியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
#U19WC2024 : இங்கிலாந்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி ..!
இது குறித்து பேசிய அவர் “விராட் கோலி எனது மகன் போன்றவர், நான் ஏன் அவரைப் பற்றி தவறாகப் பேச வேண்டும்? அவர் நலனுக்காக நான் எப்போதும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். அவர் மீண்டும் வந்து சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் அடிப்பார் என்று நம்புகிறேன். என்னை பொறுத்தவரையில் விராட் கோலி கிரிக்கெட் சாம்பவான்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகளில் விராட் விளையாடமாட்டார் என்பது தெரியும். அவர் அடுத்ததாக மூன்றாவது போட்டியில் விளையாடுவதை பார்க்கவேண்டும் என ரசிகர்களை போலவே ஆவலுடன் காத்துள்ளேன்” எனவும் சேத்தன் ஷர்மா கூறியுள்ளார். இதன் மூலம் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக சேத்தன் ஷர்மா காரணம் இல்லை போல எனவும் கேள்வி எழும்பியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…