முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்லி கைது..!
குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்லி கைது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி மும்பை காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார். மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது குடியிருப்பு வாயிலில் தனது காரை மோதியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மது குடித்திருந்த காம்ப்ளி நிதானம் இழந்து தனது குடியிருப்பு வளாகத்தின் கேட்டில் காரை மோதினார். அதன் பிறகு காவலாளி மற்றும் சில குடியிருப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வினோத் காம்ப்லியைபின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.