இந்திய அணியின் பயிற்சியாளராக களமிறங்கும் ராகுல் டிராவிட்..!!

Default Image

இலங்கையில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 தொடர் போட்டிகளுக்கு,இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் விராட் கோலி தலைமையிலான 20 பேர் அடங்கிய இந்திய அணியினர்,ஜூன் மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆகியவற்றில் கலந்துக் கொள்வதற்காக இங்கிலாந்திற்கு செல்கின்றனர்.

இதற்கிடையில்,மற்றொரு இந்திய அணியின் வீரர்கள் இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 தொடர்களில் கலந்து கொள்வதற்காக,ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

இந்நிலையில்,இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனெனில்,தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ) இயக்குநராக பணியாற்றி வரும் டிராவிட்,இதற்கு முன்னதாக அண்டர் 19 மற்றும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து,இலங்கையில் நடைபெறவுள்ள டி-20 தொடர்களில் விளையாட ஷிகர் தவான்,சாஹல்,ராகுல் சாஹர் அல்லது ராகுல் தேவட்யா,சேதன் சக்காரியா, தேவ்டுட் படிக்கல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர்,பிருத்வி ஷா,சூர்யகுமார் யாதவ்,குருணல் பாண்டியா,புவனேஷ்வர் குமார் மற்றும் இஷான் கிஷோர் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் எனவும்,இந்த அணிக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்