ரோகித் சர்மா நீக்கம் : முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து .
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் மோசமாக ஆடிய தவான், முரளி விஜய் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.கர்நாடக புதுமுக வீரர் மயாங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளம் வீரரான ப்ரித்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளார். ஆசிய கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா தொடர்ந்து டெஸ்ட் அணியில் ஓரங்கட்டப்பட்டார்.
இந்த நிலையில் டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கங்குலி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
ஆசிய கோப்பையை ரோகித் சர்மாவும், அவரது அணி வீரர்களும் பெற்றது சிறந்ததாகும். ஒவ்வொரு முறையும் டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போது ரோகித் சர்மா பெயர் இடம் பெறாமல் போகும். இது எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. அவர் விதிவிலக்கானவர். ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பெறுவது வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.
DINASUVADU