கொரோனா உறுதி – தனிமைப்படுத்திக் கொண்ட ஷேன் வார்னே..!

முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஷேன் வார்னேவுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால்,அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,இதுகுறித்து,ஆஸ்திரேலிய கிளப் அறிக்கை கூறுகையில்: “லண்டன் ஸ்பிரிட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷேன் வார்னேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் லார்ட்ஸில் நடைபெறும் தெற்கு பிரேவ் அணிக்கெதிரான போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்.மேலும் அவர் ஆர்டிபிசிஆர் முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தப்படுவார். ஆனால்,அணியில் உள்ள மற்ற வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.”என்று தெரிவித்துள்ளது.
வரலாற்றில் மிகச்சிறந்தவர்:
ஷேன் வார்னே முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மற்றும் முன்னாள் ஒருநாள் கேப்டன்.அவர் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்றவர்.1994 ஆம் ஆண்டில் விஸ்டன் கிரிக்கெட்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.இதனையடுத்து,2004 மற்றும் 2005 இல் சர்வதேச முன்னணி கிரிக்கெட் வீரராக ஷேன் வார்னேவை விஸ்டன் அறிவித்தது.
1,000 சர்வதேச விக்கெட்டுகள்:
வார்ன் 1992 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை 1,000 சர்வதேச விக்கெட்டுகளை (டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில்) கைப்பற்றியுள்ளார்.இது இலங்கையின் முத்தையா முரளிதரனுக்குப் பிறகு இரண்டாவது மைல் கல்லாகும்.ஏனெனில்,3 டிசம்பர் 2007 இல் முரளிதரனால் முறியடிக்கப்படும் வரை, வார்னின் 708 டெஸ்ட் விக்கெட்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துவீச்சாளர்கள் எடுத்த விக்கெட்டாக இருந்தது.
ஓய்வு:
அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வர்ணனையாளராகவும் இருந்தார்.இதனைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ஷேன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஐபிஎல்:
இதற்கிடையில்,இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் நான்கு சீசன்களில் (2008-2011) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.அப்போட்டிகளில் அவர் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக இருந்தார். 2008 சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக தனது அணியை வெற்றிக்கு வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.