ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்(46) கார் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குயின்ஸ்லாந்தில் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.ஆரம்பத் தகவலின்படி,நேற்று இரவு 11 மணிக்குப் பிறகு ஆண்ட்ரூ சென்று கொண்டிருந்த கார் ஹெர்வி ரேஞ்ச் சாலையில், ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்ற போது கட்டுபாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து,ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் மறைவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது.மேலும்,கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரும் ட்விட்டரில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:”ஆஸ்திரேலியாவில் கார் விபத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இறந்ததைக் கேள்விப்பட்டு பேரிடியாகிவிட்டது.களத்திலும் வெளியிலும் சிறந்த உறவைப் பகிர்ந்து கொண்டோம்.அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்தஇரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்”என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே,விபத்தில் மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு சதம் அடித்துள்ளார்.மேலும்,ஆஸ்திரேலியாவுக்காக 198 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார் மற்றும் இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளில் ஒரு பகுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…