‘ரசிகர்களே மன்னித்து விடுங்கள்’ – வருத்தம் தெரிவித்த முகமது ஷமி ! காரணம் என்ன?

நான் விரைவாக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தயாராக இருக்கிறேன் என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

MOhammad Shami

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா அணியுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளது. இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர் என்றால் அது பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் தான்.

கடைசியாக நடைபெற்ற இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று வரலாறு காணாத சாதனைப் படைத்தது. இந்த தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதில் முகமது ஷமியின் பெயர் இடம் பெறாதது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது என்றே கூறலாம். ஏனெனில் வேகத்திற்கு அமையும் ஆஸ்திரேலியாவின் பிட்ச்களில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பும்ரா, சிராஜ் ஆகியோருடன் விளையாட ஷமியும் விளையாடு வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோலாகவும் இருந்து வந்தது.

2023 உலகக் கோப்பையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி பல பயிற்சிகளில் சமீபத்தில் ஈடுபட்டு வந்தார். மேலும், ஆஸ்திரேலிய தொடரில் கண்டிப்பாக அவர் குணமடைந்து இந்தியாவுக்காக விளையாடுவார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி இருக்கையில், சமீபத்தில் பயிற்சி எடுக்கும் போது ஷமி புதிதாக முழங்காலில் காயம் கண்டதாக தெரிகிறது. அதனாலேயே அவர் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “எனது முயற்சிகளை மேற்கொண்டு பவுலிங் ஃபிட்னஸை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறேன்.

தற்போதைய நிலைமையில் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்னை மன்னிக்கவும். ஆனால், நான் விரைவாக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்”, என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ரஞ்சிக் கோப்பையில் ஏதேனும் ஒரு போட்டியில் விளையாடினால் கூட உடனடியாக ஷமி ஆஸ்திரேலிய தொடரில் பாதியிலேயே தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்