ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம்.! விரக்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி.!
Hanuma Vihari : கடந்த திங்கள்கிழமை (பிப்ரவரி 26,2024) அன்று இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி டிராபியின் காலிறுதி போட்டியில் மத்தியப் பிரதேச அணியிடம், ஆந்திரா அணி தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து ஆந்திர கிரிக்கெட் வாரியத்தில் மிகப்பெரிய குழப்பம் நிலவியது. ஆந்திர அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியன் டெஸ்ட் போட்டிகளின் நட்சத்திர வீரருமான ஹனுமா விஹாரி ஆந்திர கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தானாகவே ராஜினாமா செய்ததுடன் ஆந்திர அணியிலிருந்தும் வெளியேறி உள்ளார்.
Read More :- WPL 2024 : குஜராத்தை பந்தாடி பெங்களூரு அணி அபார வெற்றி ..!
இந்த சம்பவம் திடிரென்று பரபரப்பாக மாறியது. இந்த சம்பவம் குறித்து ஹனுமா விஹாரி கூறுகையில், “இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆந்திர கிரிக்கெட் அணியின் ரிசெர்வ் பிளேயரான 17-ம் நம்பர் வீரரான நரசிம்ம ப்ருத்விராஜ் எனும் வீரரை நான் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்க கூடாது என்று தகாத வார்த்தையில் திட்டினேன் எனவும் அவருடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளேன் என்று காரணம் காட்டி என்னை ஆந்திர அணியின் கேப்டன் பதவியிலிருந்து என்னை நீக்கிவிட்டனர்.
ஆனால், உண்மையில் அந்த வீரரை நான் திட்டவில்லை. விதிப்படி ஒரு ரிசர்வ் வீரர் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்க கூடாது, அதனால் நான் ட்ரெஸ்ஸிங் ரூமில் நீ இருக்க கூடாது என்று கூறினேன் அதை அந்த வீரர் தவறாக எடுத்து கொண்டார். மேலும், அவரது தந்தையிடமும் நான் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறி புகார் செய்துள்ளார். அவரது தந்தை ஒரு அரசியல்வாதியாவார்.
Read More :- Nepal T20I : அடுத்த டிவில்லியர்ஸ் இவரா ? அதிவேக சதம் அடித்து நமீபியா வீரர் சாதனை ..!
அவர் தந்தையிடம் புகார் செய்ததிலிருந்து எனது வாழ்க்கையில் எல்லாமே தவறாகி விட்டது. இதனால் என்னை கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய சொன்னார்கள், எனக்கு அது பிடிக்கவில்லை ஆனாலும் எனக்கு வேறு வழியும் இல்லை. நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளபட்டேன். அப்படி இருந்தும் ஆந்திர அணிக்காக நான் விளையாடினேன்.
ஏனென்றால், நான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பேன், கிரிக்கெட் விளையாட்டை மிகவும் மதிப்பெண். இரண்டு மாதங்களாக எனக்கு நிம்மதி இல்லை. இந்த சம்பவத்தால் எனது சுய மரியாதையை நான் இழந்து விட்டேன். இதனால் தான் நான் ஆந்திர கிரிக்கெட் அணியிலிருந்தும் வெளியேறினேன்”, என்று இந்தியா டுடே பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் ஹனுமா விஹாரி கூறி உள்ளார்.
Read More :- நீங்க கொஞ்சம் விஸ்வாசமா இருங்க ..கேப்டன் ரோஹித் சொல்வது சரிதான் – சுனில் காவஸ்கர்
மேலும், அவர் மீது தவறில்லை என ஆந்திர அணியின் மற்ற வீரர்கள் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தையும், ஹனுமா விஹாரி அவரது இன்ஸ்டாகிராம் சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.