அடுத்த இரண்டு ஆண்டுகள் தோனிதான் கேப்டன்-காசி விஸ்வநாதன்.!

Default Image

தோனி ஐபிஎல் போட்டி விளையாடுவது குறித்து இன்று செய்தியாளர்களிடம் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நலனுக்கும் நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் ஐபிஎல் போட்டியயை காண்பதற்கு காத்துள்ளார்கள் என்றே கூறலாம்.

மேலும் மிகவும் பெரிய அளவில் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தோனிக்காக என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் இந்நிலையில் மேலும் தோனி ஐபிஎல் போட்டி விளையாடுவது குறித்து இன்று செய்தியாளர்களிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியது இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி தான் கேப்டன் அடுத்த 2021 ஆம் ஆண்டு தோனிதான் கேப்டன் அதற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டும் அவர்தான் கேப்டன் அதிலிருந்து ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை .

மேலும் தற்போது சமூக வளைதளத்தில் தோனி ஜார்கண்டில் வளையப்பயிற்சி எடுப்பதாக தகவல்களை நாங்கள் கேள்விப்பட்டோம் ஆனால் அவரது ஆற்றல் திறன் குறித்து எந்த ஒரு கவலையும் எங்களுக்கு இல்லை, அவருடைய பொறுப்பு என்பது அவருக்கே தெரியும் அவருக்கு தனது கிரிக்கெட் அணியை வழிநடத்த வேண்டும் என்பது மிகவும் நன்றாகவே தெரியும்.

மேலும் ஐபிஎல் தொடரில் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆக இருப்பவர் தோனி 2 ஆண்டு தடை காலம் தவிர்த்து மொத்தம் 10 ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் 8 முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்றால் தோனி தான் என்று கூறலாம் என்றும் கூறியுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்