அடுத்த 10 ஆண்டுகளுக்கு CSK அணிக்கு… தோனிதான் பாஸ்..!
அடுத்த 10 ஆண்டுகளுக்கு CSK அணிக்கு தோனிதான் பாஸாக இருப்பார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து மிஹிர் திவாகர் சமீபத்தில் கூறியது நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் கவனிக்கும் போது நிச்சயம் அவர் ஓய்வு பெறமாட்டார் என்பது பற்றி மட்டும் நான் உறுதியாக கூறுவேன் என்று கூறியது ரசிகர்கள் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது 39 வயதாகும் தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் அணியில் இருந்து ஓய்வு பெற்று வரும் என்றே கூறலாம், மேலும் ஆனாலும் சென்னை கேப்டன் தோனியை தவிர யாரையும் அந்த இடத்தில் வைத்து பார்க்க கூட விரும்பவில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தற்பொழுது CSK தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில் இன்னும் 10 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி தான் பாஸ் ஆக இருப்பார் இதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.