இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். 3-வது போட்டியில் ஜடேஜா 112 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டை பறித்தார்.
இதற்கிடையில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரே டெஸ்ட் தொடரில் 20-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இது 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் இந்த சாதனையை செய்தது இல்லை இதுவே முதல் முறையாகும்.
3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஜெய்ஸ்வால் இதுவரை 22 சிக்ஸர் விளாசி உள்ளார். அதிலும் 3-வது போட்டியில் மட்டும் 12 சிக்ஸர் அடித்துள்ளார்.
இந்தியாவில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிக சிக்ஸர்கள் போட்டிகள்:
28 சிக்ஸர் இந்தியா vs இங்கிலாந்து = ராஜ்கோட் 2024
27 சிக்ஸர் இந்தியா vs இலங்கை = விசாகப்பட்டினம் 2019
18 சிக்ஸர் இந்தியா vs நியூசிலாந்து = மும்பை 2021
15 சிக்ஸர் இந்தியா vs இலங்கை = மும்பை 2009
INDvsENG : இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள்:
48 சிக்ஸர் இந்தியா vs இங்கிலாந்து 2024 (3 டெஸ்ட் போட்டி)
47 சிக்ஸர் இந்தியா vs தென்னாபிரிக்கா 2019 (3 டெஸ்ட் போட்டி)
43 சிக்ஸர் இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா 2023 (5 டெஸ்ட் போட்டி)
40 சிக்ஸர் ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து 2013/14 (5 டெஸ்ட் போட்டி )
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…