கொரோனா நிவாரண நிதிக்காக ரூ. 11 கோடி விராட் கோலி அனுஷ்கா தம்பதி திரட்டியுள்ளனர்.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து ரூ.2 கோடி நிதியுதவியை கடந்த மே 7 ஆம் தேதி வழங்கினார்கள். அதனை தொடர்ந்து “InThisTogether” என்ற ஹாஷ்டேக் மூலம் ‘கெட்டோ’ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து விராட்கோலியும் அனுஷ்கா சர்மாவும் கொரோனா நிவாரணத்திற்காக ரூ.7 கோடி நிதி திரட்ட திட்டமிட்டிருந்தார்கள். இதில் முதற்கட்டமாக 2 கோடி வழங்கினார்கள்.
இந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து ரூபாய் 11 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளதாக விராட் கோலி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் ” இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. ஒரு முறை இல்லை நாங்கள் இருமுறை இலக்கை தாண்டிவிட்டோம். நிதியுதவி அளித்தவர்களுக்கும் தகவலைப் பகிர்ந்தவர்களுக்கும் என அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக ரூ. 11.39 கோடி நிதியை கேட்டோ அமைப்பின் வழியாக விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் திரட்டியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…