இந்திய ஜெர்ஸியை அணிந்து வாழ்த்து தெரிவித்த கால்பந்து வீரர் தாமஸ் முல்லர்.!
இந்த ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பைக் கிரிக்கெட்டில் லீக் போட்டிகள் முடிவடைந்து, அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா பேட்டிங் மற்றும் ஃபீல்ட்டிங் என அனைத்திலும் சிறப்பான ஃபார்மில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு போட்டியில் கூட தோல்வியை அடையாமல் வெற்றியைக் கண்டு முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
அதன்படி, முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை மதியம் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.
IND vs NZ: அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பழையப் பகையைத் தீர்க்குமா இந்தியா.?
இந்த நிலையில், போட்டிக்கு முன்னதாக ஜெர்மனியை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் தாமஸ் முல்லர், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை அணிந்து, உலககோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். தாமஸ் முல்லர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், “இந்திய அணியின் ஜெர்ஸியை தனது அளித்ததற்கு நன்றி. மேலும் உலகக் கோப்பையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என கூறியுள்ளார். அதோடு, விராட் கோலியை குறிப்பிட்டு, சட்டைக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இதே போல 2019 உலகக்கோப்பையின் போதும் முல்லர், இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும்போது விராட் கோலியைக் குறிப்பிட்டிருந்தார்.
போட்டி ரத்து.. புள்ளி பட்டியலில் முதல் அணி வெற்றி.. ஐசிசி அறிவிப்பு..!
இப்போது அவருக்கு வழங்கப்பட்ட ஜெர்ஸியில் தாமஸ் முல்லரின் பெயர் மற்றும் அவரது எண் 25 என்பது அச்சிடப்பட்டுள்ளது. முல்லரைப் பற்றி பேசுகையில், தற்போதைய 2023-2024 சீசனில் 10 பன்டெஸ்லிகா போட்டிக்களில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகளில் ஒரு முறை கோல் அடித்தும் , 4 முறை அசிஸ்ட்டும் செய்துள்ளார். அதேபோல யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக்கில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் ஒரு முறை அசிஸிட் செய்துள்ளார்.