ரெய்னாவை தொடர்ந்து ,ரவீந்திர ஜடேஜாவின் சர்ச்சை கருத்து..!

Published by
Edison

நானும் பிராமிண்தான் என்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து,ரவீந்திர ஜடேஜாவும் தற்போது சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.டெஸ்ட் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் இந்திய அணி, கவுண்டி லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இப்பயிற்சி போட்டிகளில் கவுன்டி செலக்ட் லெவன் அணிக்கு எதிராக இரட்டை அரைசதங்கள் அடித்ததால் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளார்.ஏனெனில்,முதல் இன்னிங்சில், அவர் 75 ரன்கள் எடுத்தார், இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் எடுத்துள்ளார்.

jadeja

சுறுசுறுப்பு:

ஜடேஜா களத்தில் மற்றும் வெளியே, குறிப்பாக சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். அவர் தனது அனுபவங்களை சமூக ஊடகங்களில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்.

ராஜ்புட் பையன்:

இந்நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை ட்வீட் செய்துள்ளார். அதில்,”எப்போதும் ராஜ்புட் பையன்,ஜெய் ஹிந்த்”,என்று தெரிவித்துள்ளார்.

இளமைக் காலம்:

ஜடேஜா ஒரு இடது-கை சுழற்பந்து வீச்சாளர்,ஆல் ரவுண்டர்.2008 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் விராட் கோலியின் தலைமையில் கோப்பை வென்ற அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.மேலும்,பிப்ரவரி 8, 2009 ஆம் ஆண்டில் இலங்கைத் அணிக்கு எதிரான சர்வதேச  ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.

இந்தியன் பிரீமியர் லீக்:

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். முதல் சீசனில் சிறப்பாக விளையாடிய அவர், இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல ராஜஸ்தான் அணியில் முக்கிய பங்கு வகித்தார். தொடரின் முடிவில் 14 போட்டிகளில் விளையாடி 135 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து,2012 ஆம் ஆண்டு இவரை ஏலத்தில் எடுப்பதில் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான கடுமையான போட்டியின் பின்னர் அவர் சென்னை சூப்பர் கிங்ஸால் 2 மில்லியனுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் சீசன் 19 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 6 பந்தில் 36 ரன்கள் எடுத்து அசத்தினார்.இதனால் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெய்னா:

இதற்கு முன்னதாக,தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) 5-ஆவது சீசன் டி 20 போட்டிகள் கடந்த ஜூலை 19 ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டியின் நேரலையில், காணொலியின் மூலமாக பேச இந்தியாவின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா அழைக்கப்பட்டார்.

அப்போது,ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர் சென்னை கலாச்சாரத்தை நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டீர்கள் என்று ரெய்னாவிடம் கேட்டார். ஏனெனில் அவர் வேட்டி அணிவது,நடனம் மற்றும் விசில் அடிப்பது போன்ற கலாச்சாரத்தை பின்பற்றுவதால் இவ்வாறு கேட்பதாக வர்ணனையாளர் கூறினார்.

ரெய்னாவின் பதில்:

அதற்கு பதிலளித்த ரெய்னா,”நானும் பிராமணன் என்று நினைக்கிறேன். நான் 2004 முதல் சென்னையில் விளையாடுகிறேன். அதனால்,இந்த கலாச்சாரத்தை நான் விரும்புகிறேன்.மேலும்,எனது அணியினரை நேசிக்கிறேன்.நான் அனிருதா ஸ்ரீகாந்த்,பத்ரிநாத், எல்.பாலாஜி ஆகியோருடன் விளையாடியிருக்கிறேன்.சி.எஸ்.கே.வில் சிறந்த நிர்வாகம் உள்ளது.நாங்கள் எங்களைக் கண்டுப்பிடித்துக் கொள்வதற்கான உரிமை உள்ளது.சென்னை கலாச்சாரத்தை நேசிக்கிறேன்.எனவே,சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்”, என்று கூறினார்.

நெட்டிசன்கள் எதிர்ப்பு:

இதனையடுத்து,சுரேஷ் ரெய்னா,தன்னை ஒரு பிராமணன் என அடையாளப்படுத்திக் கொண்டு பேசியது,கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Published by
Edison

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago