இந்தியா vs இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து அணி..!

Default Image

இன்று ஆரம்பமாகவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் நாள் டெஸ்ட் போட்டியில்,இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது.இதனைத் தொடர்ந்து,5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில்,இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் நாள் டெஸ்ட் தொடர் இந்திய நேரப்படி,சற்று நேரத்தில் மாலை 3.30 மணிக்கு நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது.அதன்படி,போட்டிக்கு முன்னதாக  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அணி( XI): ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த் (wk), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்

இங்கிலாந்து அணி (XI): ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (c), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர் (wk), சாம் கர்ரன், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்