நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி இடத்தை இழந்த பிறகு,இந்திய அணியானது நியூசிலாந்துடன் மூன்று டி20 போட்டிகளிலும் நவம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் விளையாடுகிறது.இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதியும்,இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக,முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்றும்,இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலியே கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் துணை கேப்டன் புஜாரா,ராகுல் ,மயங்க்,கில்,ஸ்ரேயாஸ் ஐயர்,சஹா,கே.எஸ்.பரத்,அஸ்வின், ஜடேஜா,அக்சர் படேல்,ஜெயந்த் யாதவ்,இஷாந்த்,உமேஷ்,சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக ஸ்ரேயாஸ் ஐயர்,கே.எஸ்.பரத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அதே சமயம்,ரோஹித் சர்மா,ரிஷ்ப் பந்த் ஆகியோருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ஏ ரஹானே (c), சி புஜாரா (VC), கேஎல் ராகுல், எம் அகர்வால், எஸ் கில், எஸ் ஐயர், டபிள்யூ சஹா (டபிள்யூ கே), கேஎஸ் பாரத் (டபிள்யூ கே), ஆர் ஜடேஜா, ஆர் அஷ்வின், ஏ படேல், ஜே யாதவ், ஐ சர்மா , யு யாதவ், எம்டி சிராஜ், பி கிருஷ்ணா.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…