முதல் டி-20 போட்டி…!ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற குல்தீப் யாதவ்…!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி-20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் குல்தீப் யாதவ் பெற்றுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடிவருகிறது.இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில் டி20 போட்டி அறிவிக்கப்பட்டது.
முதல் டி20 போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்ட நிலையில் ரோகிட் தலைமையிலான இந்திய அணி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் களமிரங்கியது.இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் சேர்த்தது.இந்திய அணி தரப்பில் குல்தீப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் மேற்கு கிந்திய அணி இந்திய அணிக்கு 110 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. 110 என்ற இலக்குடன் பேட்டிங்கிற்கு ரோகித் தலைமையிலான இந்திய படை களமிறங்கியது.
இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் 31 * ரன்கள் அடித்தார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் குல்தீப் யாதவ் பெற்றுள்ளார்.3 விக்கெட்டை வீழ்த்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.