இந்த ஆண்டின் முதல் ஐசிசி விருது; ஷுப்மன் கில் அசத்தல்.!

Default Image

ஐசிசியின் ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை, இந்தியாவின் ஷுப்மன் கில் வென்றுள்ளார்.

ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு அந்த மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதேபோல் இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் ஐசிசி விருதை இந்தியாவின் ஷுப்மன் கில் அடைவர் பிரிவில் வென்றுள்ளார். அவர் சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிராக அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார், மேலும் இளம் வயதில் இந்த சாதனையைப் படைத்திருந்தார்.

இதனையடுத்து கில், ஜனவரி 2023க்கான ஐசிசி ஆடவர்களுக்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார். நியூசிலாந்தின் டெவோன் கான்வே மற்றும் இந்தியாவின் முகமது சிராஜ் ஆகியோரும் இந்த விருதுக்காக ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். கில் மூன்று சதங்கள் உட்பட ஜனவரியில் 567 ரன்கள் அடித்திருந்தார், மேலும் கில் இந்த விருதை முதன்முறையாகப் பெறுகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது வென்றது குறித்து, கில் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார், மேலும் தனது அணியினர் மற்றும் பயிற்சியாளர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும், கில்லுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ தனது ட்விட்டரில், ஜனவரி மாத ஐசிசி சிறந்த வீரர் விருது வென்ற கில்லுக்கு வாழ்த்துகள், அனைத்து வித கிரிக்கெட்களிலும் சதமடித்த இந்தியாவின் 5-வது கிரிக்கெட்டர் கில் என்று தனது ட்வீட்டில் பகிர்ந்துள்ளது.</

p>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்