முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா அணி 13 ஓவரில் விக்கெட்டை இழக்காமல் 21 ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் விளையாட்டு போட்டியில் பங்கேற்க இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
முதலில் களமிறங்கிய ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை மத்தியில் களம் கண்ட ஜோ ரூட் அரைசதம் அடித்து 64 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து அணியில் சாம்கரண் 27 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் பறித்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியதில் இருந்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா அணி 13 ஓவரில் விக்கெட்டை இழக்காமல் 21 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ரோஹித் மற்றும் கே.எல் ராகுல் தலா 9 ரன்களுடன் உள்ளனர். நாளை 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கவுள்ளது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…