ஜாதி குறித்து பேச்சு – யுவராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் , யுவராஜ் சிங் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.அதாவது யுஸ்வேந்திர சாகல் ஜாதி குறித்து பேசியது தொடர்பாக யுவராஜ் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்தார்.புகார் அளிக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஹரியானா போலீசார் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.ஹிசார் போலீசார் ஐபிசியின் 153, 153 ஏ, 295, 505 பிரிவுகளின் கீழும் , எஸ்சி / எஸ்டி சட்டத்தின் 3 (1), 3 (1எஸ்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு யுவராஜ் சிங் ரோகித் சர்மாவுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் உரையாடினார். இந்த உரையாடலின் போது , இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாகல் வெளியிட்ட டிக் டாக் வீடியோ குறித்து யுவராஜ் சிங் பேசினார். இதில் சாகலின் ஜாதி குறித்து யுவராஜ் சிங் பேசியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது .இதைத்தொடர்ந்து யுவராஜ் சிங் மன்னிப்பு கோரினார். மேலும் இது குறித்து யுவராஜ் சிங் அளித்த விளக்கத்தில், “ஜாதி, நிறம், மதம் அல்லது பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் நான் எந்தவிதமான ஏற்றத்தாழ்வையும் நம்பவில்லை என்பதை இது தெளிவுபடுத்துவதாகும். மக்களின் நலனுக்காக நான் தொடர்ந்து என் வாழ்க்கையை செலவிட்டேன். நான் கண்ணியத்தை நம்புகிறேன் என்று யுவராஜ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.