IPL 2024 : சேப்பாக்கத்தில் இறுதி போட்டி ..? மாலை வெளியாகிறது முழு அட்டவணை ..!
IPL2024 : கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் மார்ச்-22 அன்று தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியாகும் போதே பலவித சர்ச்சைகளுடன் தான் வெளியானது. இந்த ஆண்டில் இந்தியா நாட்டில் நடைபெற இருக்கும் இந்த நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் வெளியுடுவோம் என பிசிசிஐ தரப்பில் முதலில் கூறி இருந்தனர்.
அதன் பிறகு, பிசிசிஐ அறிவித்தது போல ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் முதலில் வெளியிட்டது. அந்த அட்டவணையில் ஐபிஎல் போட்டிகள் மார்ச்-22 முதல், ஏப்ரல்-7 ம் தேதி வரை நடைபெறும் எனவும், இடைப்பட்ட நாட்களில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறும் என அறிவித்திருந்தது. மீதம் நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ, நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியான பிறகு அறிவிக்கும் என தெரிவித்திருந்தது.
தற்போது, நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடுவதாக X தளத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், நடைபெற போகும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தான் நடைபெறும் என பிசிசிஐ முன்கூட்டியே அறிவித்தது. இந்நிலையில், வெளியாக போகும் இந்த ஐபிஎல் தொடரின் குவாலிபயர் -1 போட்டியும், எலிமினேட்டர் போட்டியும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாகவும்.
குவாலிபயர்-2 மற்றும் இறுதி போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எனவும் தெரிய வந்திருக்கிறது. அதிலும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியை சென்னை அணியின் போட்டியோடு தொடங்கியது போல, இரண்டாம் பாதியையும் சென்னை அணியின் போட்டியோடு தொடங்குகிறது எனவும் தெரிகிறது. இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கும் எனவும் அன்றைய போட்டியாக இரவு 8 மணி ஆட்டத்தில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது எனவும் தெரிய வந்துருகிறது.