ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் என்ன நடக்கும் இங்கே பார்க்கலாம்…
ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று மற்றும் பிளேஆப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இறுதி சுற்று போட்டி இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தோனி தலைமையிலான சென்னை அணி முதல் தகுதி சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றது நேரடியாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. ஆனால், குஜராத் அணி முதல் தகுதி சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால் இரண்டாவது தகுதி சுற்றில் மும்பை அணியுடன் மோதி 62 ரங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிச்சுற்று போட்டியில் மழையானது குறுக்கிட்டு ஆட்டமானது தாமதமாக தொடங்கினால் விளையாடும் நேரம் மற்றும் மைதானத்தின் தரத்தைப் பொறுத்து, ஆட்டத்திற்கு 5 முதல் 12 ஓவர்கள் வரை வழங்கப்படும். அதில் வெற்றி பெரும் அணியே சாம்பியன் பட்டம் வெல்லும்.
ஒருவேளை மழையானது நாள் முழுவதும் தொடர்ந்து சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டியானது நடைபெறமால் போனால் லீக்சுற்றுகளின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருக்கும் அணியான குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றதாகக் கருதப்படும்.
ஆனால் அகமதாபாத்தில் இன்று மழை பெய்வதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லையென்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த ஐபிஎல் சீசனில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக தடைப்பட்டதால் இரு அணிகளுக்கும் ஓரு புள்ளிகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…