இறுதிப்போட்டி: இந்திய XI அணியை அறிவித்த பிசிசிஐ..!
நேற்று இந்திய அணியின் ப்ளேயிங் 11 பெயர் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான 15 வீரர்களை பிசிசிஐ ஏற்கனவே தேர்வு செய்தனர். இதனால், ப்ளேயிங் 11 அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேற்று ப்ளேயிங் 11 அணியின் பெயர் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
அதில், ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்பரீத் பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
???? NEWS ????
Here’s #TeamIndia‘s Playing XI for the #WTC21 Final ???? ???? pic.twitter.com/DiOBAzf88h
— BCCI (@BCCI) June 17, 2021