இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தனர்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனைதொடர்ந்து 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் முழுவதும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றவுள்ளது. இன்று முதல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணி முதலில் இறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் தவான் களமிறங்கினர். ஆனால், ஆட்டம் தொடங்கத்திலே இந்திய அணி விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர்களான கே.எல் ராகுல் ஒரு ரன், தவான் 4 ரன்னும், இந்திய அணியின் கேப்டன் கோலி ரன் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர், இறங்கிய ரிஷாப் பந்த் நிதானமாக விளையாடி 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதையெடுத்து, மத்தியில் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசி, 65 ரன்கள் குவித்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தனர். 125 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…