சாதனை படைத்த கேப்டனுக்கு மைதானத்தில் பரிசு வழங்கிய சக வீராங்கனைகள்..!

ஆஸ்திரேலியா மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து டி20 , டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் ஜார்ஜியா 3 விக்கெட்டையும் , ஜோனாசென் 4 விக்கெட்டையும் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து இறங்கிய ஆஸ்திரேலிய அணி 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 83 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அலிஸா ஹீலி 38 ரன்கள் அடித்தார்.
Congrats @stafanie07! 100 T20I games is by no means a small achievement!???????????? Play well tonight ladies!???????? #WIWomen #ItsOurGame pic.twitter.com/gbk9jmUSpr
— Windies Cricket (@windiescricket) September 18, 2019
இப்போட்டி துவங்குவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஸ்டாஃபனி டெய்லர் சர்வேதேச டி20யில் தனது 100-வது போட்டி கால் எடுத்து வைத்தார்.அதற்காக டெய்லருக்கு சக வீராங்கனைகள் அவர் பெயரில் 100 என எழுதப்பட்ட ஜெர்சியை பரிசாக கொடுத்தனர்.
டெய்லர் 100 சர்வேதேச டி20 போட்டியில் விளையாடி 2900 ரன்கள் குவித்து உள்ளார். அதில் 21 அரைசதம் அடங்கும் . அதிகபட்சமாக 90 ரன்கள் அடித்து உள்ளார். சர்வேதேச டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் 2,441 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025