பிப்ரவரி மாத ஐசிசி விருது..! ஹாரி புரூக், ஆஷ்லே கார்ட்னர் அசத்தல்..!
ஐசிசியின் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை, இங்கிலாந்தின் ஹாரி புரூக் வென்றுள்ளார்.
ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு அந்த மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதேபோல் இந்த 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத ஐசிசி விருதை ஆடவர் பிரிவில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் வென்றுள்ளார். முன்னதாக டிசம்பர் 2022க்கான ஐசிசி ஆண்களுக்கான சிறந்த வீரர் விருதைப் பெற்றிருந்தார். தற்பொழுது இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெற்றுள்ளார்.
Seeing double! ⭐️
Harry Brook wins the ICC Men’s Player of the Month award for the second time ????
Details ????https://t.co/S2JrG8Mavw
— ICC (@ICC) March 14, 2023
இதே போல, இந்த 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத ஐசிசி விருதை மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் வென்றுள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக்கோப்பைப் போட்டியில், தனது சிறந்த ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு ஆஷ்லே கார்ட்னர் முக்கிய பங்கு வகித்தார்.
The winner is… ????
Ash Gardner claims the ICC Women’s Player of the Month award for February 2023.
More ????https://t.co/smMIWkxHGE
— ICC (@ICC) March 14, 2023
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு ஆஷ்லே கார்ட்னர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.