ஜெர்சியை கழற்றி எங்கய்யா கொழுப்பு இருக்கு!? நல்லா பாரு..பயிற்சியாளரிடம் பாகிஸ்தான் வீரர் பயங்கரம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் உமர் அக்மல்
- பயிற்சியாளரை நோக்கி ஜெர்சியை கழற்றிவிட்டு கொழுப்பு எங்கே இருக்கிறது? என்று கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் உமர் அக்மல். இவர் ஒழுங்கீனம் மற்றும் உடற்தகுதி போன்ற பிரச்சனை காரணமாக சர்வதேச அணியில் விளையாட முடியாமல் தற்போது இருந்து வருகிறார்.
ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அன்மைக்காலமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்களும் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது.
இதனால் உமர் அக்மல் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபிக்க சென்றுள்ளார்.அதில் சில தேர்வில் அவர் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த உஅமர் டிரைனரிடம் தான் அணிந்திருந்த ஜெர்சியை கழற்றி கொழுப்பு எங்கே இருக்கிறது? என்று தன்னுடைய ஆதங்க கோபத்தை வெளிப்படுத்தினார்.
டிரைனரிடம் இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடைவிதிக்கலாம் என தகவல்கள் கசிந்து வருகிறது.