கொல்கத்தாவில் நான் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன் என அபார வெற்றிக்கு பின் எம்எஸ் தோனி உருக்கம்.
16-வது ஐபிஎல் தொடரின் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி வீர்ரகள் அதிரடியாக விளையாடி இமாலய இலக்கை நிர்ணயம் செய்தனர். அதாவது, 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தனர்.
சென்னை முதலிடம்:
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்க நேரிட்டனர். இருப்பினும், ஜேசன் ராய் மற்றும் ரிங்கு சிங் அதிரடியா ஆட்டத்தால் சற்று ரன் மழை பொழிந்தது. இருப்பினும் , இறுதியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 10 புள்ளிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை.
மஞ்சள் நிறம்:
இதனிடையே, கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டி சென்னையில் நடைபெற்றது போல் மைதானம் முழுவதும் மஞ்சள் நிறம் சூழ்ந்தது, பலரும் ஆசிரியத்தில் இருந்தனர். தோனி படை எங்கு சென்றாலும், அங்கு மஞ்சள் நிறம் நிறைந்திருக்கும், அந்த அளவுக்கு சென்னை ரசிகர்கள் நாடு முழுவதும் ஏரளாமானோர் உள்ளனர். அந்த வகையில் தோனியை பார்க்க நேற்று நடைபெற்று போட்டியில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
தோனி உருக்கம்:
கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, கொல்கத்தாவில் நான் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இங்கிருந்து நான் பணி செய்த கரக்பூர் ரயில் நிலையத்திற்கு 2 மணி நேரத்தில் போக முடியும். அந்த பந்தம் தற்போது நீள்கிறது. எனக்கு FAREWELL அளிப்பதற்காக ரசிகர்கள் இப்படி மஞ்சள் ஜெர்சியில் வந்திருக்கிறார்கள் என நினைக்கிறன். ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி.
குழு விளையாட்டு:
இதில் பலரும் அடுத்த போட்டியில் கொல்கத்தா ஜெர்சி அணிந்து அவர்களுக்கு தான் ஆதரவு அளிக்கப்போகிறார்கள், என ஈடன் கார்டன் மைதானம் முழுவதும் மஞ்சள் ஜெர்சியால் நிறைந்து காணப்பட்டது குறித்த கேள்விக்கு தோனி பதிலளித்தார். மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பெறும் வெற்றியின் காரணமாக, அணிக்குள் நம்பிக்கை கிடைத்துள்ளது. குறிப்பிட்ட ஒரு வீரர் நன்றாக விளையாடுவதை விட அணியாக சிறப்பாக விளையாடுவதே முக்கியம் எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…