கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய விராட் கோலியை ரசிகர்கள் கலாய்த்த நிலையில் அவர் மிகவும் கோபமடைந்தார்.

ViratKohli

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது 86 பந்துகளில் பொறுமையாக பேட் செய்து 36 ரன்கள் குவித்து, ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக விளையாடி கொண்டிருந்த விராட் கோலி பொறுமையாக விளையாட நினைத்து அட்டமிழந்த காரணத்தால் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

ஏற்கனவே, அவுட் ஆன கோபத்தில் இருந்த விராட் கோலியை ரசிகர்கள் கூடுதலாக கோபப்படுத்தும் விதமாக பெவிலியன் திரும்பிய போது வாய்க்கு வந்ததை பேசி கலாய்த்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கலாய்த்ததை கேட்ட விராட் கோலி மீண்டும் திரும்பி வந்து யார் கலாய்த்தது என்பது போல முறைத்து பார்த்தார். உடனடியாக ரசிகர்கள் பேசுவதை நிறுத்திவிட்டு அமைதியாக விராட் கோலியை பார்த்தார்கள்.

இருப்பினும் விராட் கோலி அந்த இடத்தைவிட்டு போகாமல் முறைத்து பார்த்துக்கொண்டிருந்தார். உடனடியாக ஓடி வந்த அதிகாரி ஒருவர் விராட் கோலியை கோப படாதீங்க பாஸ் என்பது போல தோளில் கையைபோட்டுக்கொண்டு அழைத்து சென்றார். விராட் கோலியும் கோபத்தை குறைத்து கொண்டு பெவிலியனிற்குள் சென்றார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோக்களை பார்த்த பலரும் இப்படி முறைத்து பதில் சொல்லாமல் உங்களுடைய பேட்டிங் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுங்கள் என கூறி வருகிறார்கள். ஏற்கனவே, விராட் 1 ஆம் நாள்  போது ஆஸ்ரேலியா அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸுடன் தோள்பட்டை மோதலில் ஈடுபட்டார். இதற்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராகவும் கண்டனங்கள் எழுந்தது.

போட்டிக்கு நடுவே வாக்குவாதம் செய்த காரணத்தால் விராட் கோலிக்கு ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக ஐசிசி போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ரசிகர்களை முறைத்த சம்பவமும் சேர்த்து வைத்து பலரும் சமூக வலைத்தளங்களில் விராட்கோலியை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்