IPL Trophy [file image]
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான பிளே-ஆஃப்க்கான டிக்கெட்டானது இன்று மாலை 6 மணி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசனானது தற்போது முடிவடையும் கட்டத்தை நெருங்கி உள்ளது. மேலும் அடுத்த வாரம் பிளே ஆஃப் சுற்றும் தொடங்கிவிடும். இந்த பிளே ஆஃப் சுற்றின் நடக்கவிருக்கும் 4 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையின் தேதியை தற்போது ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 14 மற்றும் மே 15 தேதிகளில் மாலை 6 மணிக்கு பிளே-ஆஃப் சுற்றின் குவாலிபயர் 1, 2 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்கப்படும் என அறிவித்துள்ளனர்.
அதாவது மே 14 தேதி, இன்றைய நாளில் மாலை 6 மணி முதல் ரூபே (Ru-Pay) கார்டு வைத்திருப்பவர்கள், தகுதிச் சுற்று 1, தகுதிச் சுற்று 2 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெற்றுக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் நாளை (மே 15) மாலை 6 மணிக்கு வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல மே 26-ம் தேதி நடக்கவிருக்கும் இறுதி சுற்றுக்கான டிக்கெட்டுகளை ரூபே கார்டு வைத்திருப்பவர்கள் வருகிற மே 20-ம் தேதி அன்று மாலை 6 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும், மற்றவர்கள் அதற்கு அடுத்த நாளான மே21-ம் தேதி அன்று மாலை 6 மணி முதல் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த பிளே ஆப் சுற்றுக்கான 4 போட்டிகளின் டிக்கெட்டுகளும் அறிவிக்கப்பட்ட அன்றைய தேதிகளின் மாலை 6 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வ ஆப்பான பேடிஎம் ஆப் (Paytm App), பேடிஎம் இன்சைடர் (Paytm Insider) மற்றும் www.insider.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் அஹமதாபாத்திலும், குவாலிபயர் 2 மற்றும் இறுதி போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…